முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

விராலிமலை, கின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. 2000 -காளைகள் பங்கேற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இந்த போட்டியில்  புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2,000 காளைகள் கலந்து கொண்டன. 

500 மாடு பிடி வீரர்கள் களம் இறங்கினர். காளைகளை அடக்க வந்த காளையர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காக 2 கார்கள், 9 மோட்டார் சைக்கிள்கள், 700 சைக்கிள்கள், தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், கட்டில்கள், பீரோக்கள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.  ஜல்லிக்கட்டை 20,000 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர் மாடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

இதுதவிர, காயமடைந்தோருக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்காக விராலிமலை அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த ஜல்லிக்கட்டை உலக சாதனையில் இடம்பெறச் செய்வதற்காக கின்னஸ் உலக சாதனை மதிப்பீட்டுக் குழு வருகை தந்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து