முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டத்தை நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

முதல்வர் அறிவிப்பு...

பல மாவட்டங்களில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், தமிழ்நாடு முழுவதும் பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புர ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், இதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், என மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெற்று பயனடைவர் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கடந்த 11ம் தேதி சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தார்.

திட்டம் துவக்கம்...

அதன்படி, ஏழை, எளிய மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதி உதவி வழங்கும் இத்திட்டத்தினை 32 தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான நிர்வாக அனுமதி ஆணைகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா மற்றும் அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து