முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூட்டை மூட்டையாக தி.மு.க.வினரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: வேலூர் தொகுதி தேர்தல் ரத்து; தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, மூட்டை மூட்டையாக தி.மு.க.வினரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தீவிர சோதனை

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். துரைமுருகனின் வீட்டில் கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றறப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மொத்தம் ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக , கடந்த 10-ம் தேதி, வருமான வரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல்துறை, கதிர் ஆனந்த் மற்றும் இரண்டு தி.மு.க. பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.

ஆணையம் மறுப்பு...

இதனையடுத்து தேர்தல் அத்தொகுதியில் ரத்து செய்யப்படுமா? என கேள்வி எழுந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதிக்கு நேற்று முன்தினம் பரிந்துரை செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியது. இது குறித்து நேற்று தேர்தல் ஆணையம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுவே முதல்முறை...

இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்து அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் விடுத்த கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி கையெழுத்திட்டதும் ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுதந்திர இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலில் தொகுதி ஒன்றில் தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து