முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் நடந்த தமிழக விவசாயிகள் போராட்டத்தில் வைகோ பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் கலந்து கொண்டார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, ஜந்தர் மந்தர் பகுதிக்கு சென்று விவசாயிகளிடம் தமது ஆதரவை தெரிவித்தார். இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தரும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து