முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா வழியில், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறார் - முதல்வருக்கு, துணை முதல்வர் பாராட்டு

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில், கல்விக்கு  முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறார் முதல்வர் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டியுள்ளார்.

தமிழக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த கல்வி தொலைக்காட்சியை தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள் ஒரு ஆண்டாக நடந்து வந்தது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 10-வது தளத்தில் கல்வி தொலைக்காட்சி அலுவலகம், ஸ்டூடியோ அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களாக தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சோதனை ஓட்டம் நடந்தது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு  தொடங்கியது.

அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசிய போது, மாணவர்களுக்குள் பல ஆயிரம் திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு மாணவர்களும் தங்களது தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.மறைந்த முதல்வர்  ஜெயலலிதா வழியில், கல்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறார். கல்விக்காக தினம், தினம் சிந்தித்து பல வளர்ச்சி பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் ஆற்றி வருகிறார் இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து