முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் சோனியாவுடன் சித்தராமையா சந்திப்பு

புதன்கிழமை, 16 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை சித்தராமையா சந்தித்து பேசினார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து பா.ஜ.க. கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சித்தராமையா, பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார், எச்.கே.பட்டீல் உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அது போல, கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கும் எஸ்.ஆர்.பட்டீல், ஆர்.வி.திம்மாப்பூர் இடையே போட்டி ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுவதற்காக முன்னாள் முதல்வர் சித்தராமையா டெல்லி சென்றிருந்தார்.  கடந்த மாதம் சோனியா காந்தியை அவர் சந்தித்து பேசுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சித்தராமையாவை சோனியா காந்தி சந்திக்கவில்லை. இதனால் டெல்லியில் இருந்து அவர் பெங்களூருவுக்கு திரும்பினார். இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை சித்தராமையா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தாக கூறப்படுகிறது. சோனியாகாந்தியை சந்தித்த பின் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  இது ஒரு நல்ல சந்திப்பாக அமைந்தது. இருவரும் கர்நாடக அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம் என்று கூறினார். சோனியா காந்தியின் சந்திப்புக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராக சித்தராமையாவே நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து