முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்ட் 1 முதல் பேருந்து சேவை தொடங்குமா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலெக்டர்களுடன் ஆலோசனை: இன்று மருத்துவ நிபுணர்களை சந்திக்கிறார்

புதன்கிழமை, 29 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு நிலை குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மருத்துவ நிபுணர் குழுவினை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர் அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விரிவாக கேட்டறிந்தார். மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வரும் சூழலில் அதற்கான தடுப்புப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதே போல் பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது உள்ளிட்ட தளர்வுகள் வழங்குவது குறித்தும் கலெக்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.  

கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரிசோதனையில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. இதுவரை தமிழகத்தில் 24.7 லட்சம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 73 சதவீதமாக உள்ளது தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. திரிபாதி, காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர் அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது போல் பிரித்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அதன்படி ஜூன்மாதம் பிரிக்கபட்ட மண்டலங்கள் விவரம் வருமாறு:- 

மண்டலம் 1:- கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்

மண்டலம் 2:- தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி

மண்டலம் 3:- .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி

மண்டலம் 4:- நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை

மண்டலம் 5:- திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்

மண்டலம் 6:-  தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

மண்டலம் 7:- காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

மண்டலம் 8:- சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியாகும். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து