எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லா பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், பல்வேறு தினங்களில் மாவட்ட கலெக்டர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மத்திய அரசின் அறிவுரைகளின்படியும், தமிழகத்தில் 31.7.2020 முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பெருநகர சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அம்மாவின் அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை வழங்கியும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான், தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது. பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 29.7.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் 30.7.2020 அன்று நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2.8.2020, 9.8.2020, 16.8.2020, 23.8.2020 & 30.8.2020) எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும். அம்மாவின் அரசு அமல்படுத்தி வரும் ஊரடங்கு மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர பரிசோதனை மூலம் நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ள நிலையில் மக்களைக் காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது. இதனால் நோய்ப்பரவலை மேலும் கட்டுப்படுத்த இயலும். எனவே, பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன். நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது படிப்படியாக தளர்வுகள் வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்த ஹமாஸ் அமைப்பு
07 May 2024ஜெருசலேம் : காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிரான நிவாரண நிதி வழக்கு: தமிழக அரசு கோரிக்கை குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை அவசரமாக விசாரிக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டில்
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: மேற்குவங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
07 May 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கில் அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
07 May 2024