முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிறார்

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 

கடந்த 1-ம் தேதி அதிபர் டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் டிரம்புக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால் மேரிலாண்ட் மாகாணம் பெத்தெஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ ஆஸ்பத்திரியில் கடந்த 2-ம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் தரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிரம்ப் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடற்படை ஹெலிகாப்டர் மூலம் அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். முன்னதாக அவர் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்படுவதற்கு முன் டுவிட்டரில், நான் மிகவும் நலமாக இருக்கிறேன். விரைவில் பிரசார பாதைக்கு திரும்புவேன் என்று குறிப்பிட்டார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது உடல் நலம் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன் என்றும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கற்றுக் கொடுத்துள்ளது.  மேலும் கொரோனாவை உருவாக்கி அமெரிக்கா மற்றும் உலகத்துக்கு பேரழிவு ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலையை தர நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ புதன்கிழமையன்று பதிவு செய்யப்பட்டதாக டிரம்பின் தலைமை பணியாளர் மார்க் மெடோஸ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து