முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் உடைகிறது தி.மு.க.- காங்., கூட்டணி? 30 தொகுதியிலும் தி.மு.க. போட்டியிட முடிவு

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் வரும் சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிடும் என தி.மு.க., எம்.பி ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார். இதனால், புதுச்சேரியில் தி.மு.க.,  காங்., இடையிலான கூட்டணி உடையும் என கருதப்படுகிறது.

புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணியுடன் காங்., ஆட்சி செய்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., 10 தொகுதிகளில் போட்டியிட்டது. 

இந்நிலையில் விரைவில் சட்டசபை தேர்தல் வரவுள்ளதால், காங்., கூட்டணியில் இருந்து விலகி, தி.மு.க. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரியில் தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகன் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக சார்பில் நேற்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் பேசியதாவது:

புதுச்சேரி தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார். புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும். அனைத்து தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். இதை நான் நிறைவேற்றி காட்டுவேன். அப்படி இல்லாவிட்டால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன்.

புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் மாற்றம் நிகழும். புதுச்சேரியில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து