முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம்: மாறுபட்ட இந்திய அணியை களமிறக்க திட்டம்: கங்குலி

திங்கட்கிழமை, 10 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணி முற்றிலும் மாறுபட்ட புதிய அணியாக இருக்கும் என்று பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

5 டெஸ்ட் போட்டிகள்

இந்திய அணி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட உள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரையிலான நாட்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. 

மாறுபட்ட புதிய அணி

இதுகுறித்து பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி தெரிவித்தாவது., இந்திய ஆடவர் கிரிக்கெட் சீனியர் அணிக்காக ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடரை இலங்கை அணிக்கு எதிராக நடத்த திட்டமிட்டுள்ளோம். அநேகமாக இந்த தொடர் ஜூலை மாதம் நடைபெறலாம். இந்த தொடரில் ஷார்ட்ர் பார்மெட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களை களம் இறக்க உள்ளோம். முற்றிலும் மாறுபட்ட புதிய அணியாக இருக்கும்.

இப்போது கூற முடியாது 

இலங்கைக்கு ஜூலை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒருநாள், ஐந்து டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் காரணமாக மீதமுள்ள ஐ.பி.எல் ஆட்டங்களை எங்கு நடத்தப் போகிறோம் என்பதை இப்போது சொல்லமுடியாது என்றார். 

முன்னணி வீரர்கள்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக ஜூன் 2 அன்று இந்திய அணி இங்கிலாந்துக்குச் செல்கிறது. இதனால் இலங்கைக்குச் செல்லும் இந்திய அணியில் முன்னணி வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள். அதனால் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியின் 2-வது பிளேயிங் லெவன் கொண்ட வீரர்கள் தான் விளையாடுவார்கள் என தெரிகிறது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து