முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் நடத்தாததற்கு காரணம் ? பி.சி.சி.ஐ செயலாளர் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 30 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இந்தியாவில் மழைக்காலம் என்பதால் ஐ.பி.எல் தொடரை இங்கு நடத்த முடியாத சூழலால் இடத்தை மாற்றினோம் என்று பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

கொரோனா உறுதி

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்து 14-வது சீசன் ஐ.பி.எல் போட்டிகள் 4 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 29 போட்டிகள் முடிந்த நிலையில், எஞ்சியப் போட்டிகள் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. செப்டம்பர் 18-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை இந்த போட்டியை நடத்திவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

பி.சி.சி.ஐ முடிவு 

இந்நிலையில் எஞ்சிய ஐ.பி.எல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடத்த நடைபெற்ற பி.சி.சி.ஐ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஐ.பி.எல் போட்டிகள் ஏன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏன் மாற்றப்பட்டது என்பது குறித்து ஜெய் ஷா விளக்கமளித்துள்ளார்.

பருவமழை காலம் 

அதில் "செப்டம்பர், அக்டோபரில் இந்தியாவில் பருவமழை காலம் ஆகும். அப்போது ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்துவது உகந்ததாக இருக்காது. இதன் காரணமாகத்தான் ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த முடிவு செய்தோம்" என்றார்.

மும்பை அணி...

கொரோனா வைரசின் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபி, சார்ஜா, துபாய் ஆகிய இடங்களில் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை நடத்தப்பட்டது. இதில் டெல்லியை வீழ்த்தி மும்பை அணி 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து