முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி - 20 உலகக் கோப்பை போட்டியில் பாக்.கிற்கு அதிக நெருக்கடி இருக்கும் முன்னாள் வீரர் காம்பீர் சொல்கிறார்

வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை: டி-20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக முதல் லீக் ஆட்டத்தில் மோதும் பாகிஸ்தானுக்கு மிகுந்த நெருக்கடி அதிகம் என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

முதல் லீக் ஆட்டம்...

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கிறது. இதன் ‘சூப்பர் 12’ சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் அக்டோபர் 24-ம் தேதி முதல் லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் மோதுவதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. கடைசியாக இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலக கோப்பையில் மோதின. இதில் இந்தியா 89 ரன்னில் வெற்றிபெற்றது.

அதிக நெருக்கடி...

இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவுடன் மோதும் பாகிஸ்தான் அணிக்கு அதிகமான நெருக்கடி உள்ளது என்று முன்னாள் தொடக்க வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். 

5 முறை தோல்வி...

இதுதொடர்பாக அவர் கூறும்போது, “பாகிஸ்தானுக்கு இந்த முறையும் கடும் நெருக்கடி ஏற்படும், ஏனெனில் உலகக்கோப்பைகளில் இந்தியா பாகிஸ்தானை 5 முறை வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான் ஒருமுறை கூட உலகக்கோப்பைகளில் இந்தியாவை வென்றதில்லை. இந்தியாவுக்கு அழுத்தம் அதிகம் என்று நாம் பேசக்கூடாது.

வீழ்த்த முடியும்...

மாறாக பாகிஸ்தானுக்குத்தான் அதிக நெருக்கடி. ஏனெனில் பாகிஸ்தான் மீதுதான் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். இது அவர்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கும். இப்போதைக்குப் பார்த்தால் இந்திய அணி பாகிஸ்தானை விட நிச்சயம் பலபடிகள் மேலே உள்ளது. ஆனால் டி-20 கிரிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் வீழ்த்த முடியும். அதனால் உத்தரவாதமாக நாம் எதையும் எடுத்துக் கொள்ள கூடாது. ஆப்கானிஸ்தான் அணி பெரிய பெரிய அதிர்ச்சிகளை அளிக்கலாம். அதே போல்தான் பாகிஸ்தான் அணியும்.

ஆடுவது நல்லது...

2007 டி-20 உலகக்கோப்பையின் போது முதல் போட்டி ஸ்காட்லாந்துடன் தான், அந்தப் போட்டி மழையால் கைவிடப்பட, பாகிஸ்தானுடன் தான் முதல் போட்டியில் ஆடினோம். பாகிஸ்தானுடன் எப்போதும் ஒரு தொடரின் ஆரம்பத்தில் ஆடுவது நல்லது. ஏனெனில் பாகிஸ்தானுடன் போட்டி இருக்கிறது என்ற சிந்தனையுடனேயே நாம் அலைய வேண்டியதில்லை.

சவுகரியமாக...

முதலில் பாகிஸ்தானை முடித்து விட்டால், மற்ற போட்டிகளை எதிர்கொள்ள சவுகரியமாக இருக்கும். இரு நாடுகளும் ஆடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே. ” என்றார் கவுதம் கம்பீர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து