முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை கிரிக்கெட்: மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பந்து வீச்சு...

7-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது.  துபாயில் இன்று நடைபெறும் குரூப்-1 பிரிவு லீக் ஆட்டத்தில்  வெஸ்ட்இண்டீஸ் அணி, தென்ஆப்பிரிக்காவை சந்தித்தது.  இந்தப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

144 ரன்கள்...

வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான துவக்கம் பெற்றது. துவக்க ஜோடி 73 ரன்கள் சேர்த்தது. எனினும், அடுத்த வந்த பேட்ஸ்மேன்கள் தென் ஆப்பிரிக்க அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் அதிரடியாக ஆட சிரமப்பட்டனர்.  வெஸ்ட் இண்டீஸ்  அணி நிர்ணயிக்கப்பட்ட டி-20களில் 8 விக்கெட் இழப்புக்கு 143- ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக எவின் லெவிஸ் 56 ரன்கள் எடுத்தார்.  இதையடுத்து, 144ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து