முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வை மீட்கும் நாள்தான் நிஜமான தீபாவளி - சசிகலா சபதம்

வெள்ளிக்கிழமை, 5 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

தஞ்சாவூர் : சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்து கொள்வது குறித்து கட்சியின் நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்த கருத்து அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் சசிகலா தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். கடந்த மாதம் 26-ந்தேதி தஞ்சைக்கு வந்த சசிகலா 27-ந்தேதி நடைபெற்ற டி.டி.வி.தினகரன் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். பின்னர் 29-ந்தேதி பசும்பொன் சென்று தேவர் சமாதியில் மரியாதை செலுத்தி விட்டு மீண்டும் தஞ்சைக்கு வந்தார். இதையடுத்து கடந்த 1, 2-ந்தேதிகளில் தஞ்சாவூரில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே ஆதரவாளர்களைச் சந்தித்தார்.

அப்போது ‘அ.தி.மு.க பொதுச்செயலாளர் நான்தான்’ என தன்னை சந்திக்கும் ஆதரவாளர்களிடம் கூறி அவர்களை சசிகலா உற்சாகப்படுத்தினார். மேலும் விரைவில் தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணத்தை தொடர இருக்கிறேன். அ.தி.மு.கவை மீட்பதே லட்சியம். அன்றைக்குத் தான் நமக்கெல்லாம் நிஜமான தீபாவளி’ என சசிகலா கூறியதாக அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குடும்பம் குடும்பமாக ஆண்கள், பெண்கள் என ஒரு கூட்டம் சசிகலாவை சந்திக்க வருவதால், அவருக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. முதலில் 3 நாட்கள் மட்டுமே ஆதரவாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஒரு நாள், அதாவது இன்று 6-ந்தேதியும் சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் வருகிற 7-ந்தேதி சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். அதன் பின்னர் அவரது சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட உள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எந்த விதமான டென்‌ஷனும் இல்லாமல் தனது முக்கிய உறவினர்களுடன் பட்டாசு வெடித்து சசிகலா தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

சுமார் 30 வருடங்களுக்கு பிறகு தீபாவளி நாளில் சசிகலா தஞ்சாவூரில் இருப்பதுடன் உறவினர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடியது அவரது உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து