எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமரை தன் கூட்டணியில் தக்கவைக்க பா.ஜ.க. எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் தொடர்ச்சியாக லாலுவின் ராஷ்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் பீகாரில் மெகா கூட்டணி ஆட்சி அமைகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய 'நிதி ஆயோக்' கூட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணித்தார். ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு.) கட்சியின் இந்தப் புறக்கணிப்பின் மூலமாக பீகார் அரசியலில் சூடு பறக்கத் தொடங்கியது.
இதனால், பீகாரில் உருவான ஆட்சி மாற்ற சுழலை மாற்றும் நடவடிக்கையாக கடைசி முயற்சியாக டெல்லி மற்றும் பாட்னாவில் பல அதிரடி நடவடிக்கைகளை பா.ஜ.க. எடுத்தது. இதன் ஒருபகுதியாக பீகாரின் முடக்கப்பட்ட மூத்த தலைவர்களான ரவிசங்கர் பிரசாத்தும், ஷா நவாஸ் உசைனும் திங்கள்கிழமை டெல்லிக்கு அழைக்கப்பட்டனர்.
இவர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், முதல்வர் நிதிஷ் குமாரை கூட்டணியில் தக்கவைக்க பா.ஜ.க. வியூகம் அமைத்தது. நிதிஷ் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்த பீகாரின் மூத்த தலைவர்கள் நேரில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் பீகாரின் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் டாக்டர். சஞ்சய் ஜெய்ஸ்வால் மற்றும் பொதுச் செயலாளர் சஞ்சீவ் சவுரஸியா எம்எல்ஏ மற்றும் மருத்துவ நலத் துறை அமைச்சர் மங்கள்பாண்டே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்களின் பேச்சுவார்த்தைக்கு முதல்வர் நிதிஷ் குமார் செவிசாய்த்ததாகத் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், செவ்வாய்க்கிழமை நிதிஷ் குமாருடன் போனில் பேசியதாகத் தெரிகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில், மத்திய அமைச்சர் அமித் ஷா பல மாற்றங்களைச் செய்ய தானாகவே முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக முதல்வர் நிதிஷ் குமாரின் முக்கிய எதிரியாகக் கருதப்படும் சபாநாயகர் விஜய்குமார் சின்ஹாவையும் கட்சியிலிருந்து நீக்க தயாரானதானதாகவும் தெரிகிறது.
இதனிடையே, பீகாரின் பா.ஜ.க. மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அஸ்வின் சவுபே, ‘என்டிஏ அரசை பீகாரில் தக்க வைக்க அனைத்தையும் தியாகம் செய்யத் தயார்’ என அறிக்கைவிடுத்திருந்தார். இதற்கும் முதல்வர் நிதிஷ் குமார் அசரவில்லை.
இந்நிலையில், நேற்று காலை முதல்வரின் அரசு குடியிருப்பில் நடைபெற்ற ஜே.டி.யு.வினர் கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார் தமது கட்சியை ஒழித்துக்கட்ட பா.ஜ.க. சதி செய்ததாகக் குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து மாலை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து, தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அடுத்து மெகா கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் அளித்தார்.
இதற்காக, மெகா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், கூட்டணியின் மற்ற உறுப்பினர்களான காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டோர் நிதிஷ் ஆட்சிக்கு ஆதரவளித்து கடிதம் அளித்தனர். தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் கைகோத்துள்ள நிதிஷ் குமார் 161 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவுள்ளார். புதிய அரசில் நிதிஷ் குமார் முதல்வராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் இருப்பார் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவை சபாநாயகர் பதவி ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.
எம்எல்ஏக்களின் எண்ணிக்கை:
பீகாரின் 243 மொத்த தொகுதிகளில் கட்சிகளின் தற்போதையை நிலை: ஆர்ஜேடி-79, பா.ஜ.க.-77, ஜே.டி.யு.-45, காங்கிரஸ்-19, இடதுசாரிகள்-16, ஹிந்துஸ்தான் அவாமி சோர்ச்சா-4, ஏஐஎம்ஐஎம்-1, சுயேச்சை-1. ஒரு தொகுதி காலியாக உள்ளது.
பின்னணி என்ன? - கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ.க. 74 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் 43 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
ஆனால், நிதிஷ் குமாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆட்சி, அதிகாரத்தில் பா.ஜ.க.வின் கை ஓங்கி இருந்தது. இதன் காரணமாக ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் போராட்டம் நடந்தபோது மத்திய அரசை, நிதிஷ் கட்சியினர் விமர்சித்தனர்.
பீகார் சட்டப்பேரவையின் நூற்றாண்டு கொண்டாட்ட நிறைவு விழா அண்மையில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி தொடர்பான மலரில் முதல்வர் நிதிஷ் குமார் படம் இடம்பெறவில்லை.
கடந்த 22-ம் தேதி குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். இதில் பங்கேற்குமாறு பா.ஜ.க. விடுத்த அழைப்பையும் நிதிஷ் குமார் நிராகரித்தார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்ற விழாவிலும் நிதிஷ் பங்கேற்கவில்லை. இதனிடையே, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அண்மைக்காலமாக நிதிஷ் குமாரை அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இரு கட்சிகளிடையே மீண்டும் நெருக்கம் அதிகரித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.