முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு : மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர் 2022      தமிழகம்
Kamal 2022 09 13

Source: provided

சென்னை : அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் குற்றம் சாட்டியுள்ளது.  

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 

அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர். வழக்கமாக மருந்து கொள்முதல் செய்து ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பும் தமிழ்நாடு மருத்துவக்கழகம், சில மாதங்களாக போதிய மருந்துகளை விநியோகம் செய்வதில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளூரிலேயே மருந்து கொள்முதல் செய்யுமாறு உத்தரவிட்டதாகவும், நிதி நெருக்கடியால் போதிய மருந்து வாங்க முடியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், உயிர்காக்கும் மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, வைட்டமின் மாத்திரைகள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். அரசு டாக்டர்கள் சிலர், கடைகளில் மாத்திரை வாங்கிக் கொள்ளுமாறு நோயாளிகளிடம் தெரிவிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதனால், ஏழை, நடுத்தர மக்கள் அவதிப்படுகின்றனர். ஆகவே போதிய அளவு மருந்து கொள்முதல் செய்து, ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்குமாறு தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 days ago
View all comments

வாசகர் கருத்து