முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நானே வருவேன் விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      சினிமா
I ll-come-myself-Review 202

Source: provided

கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா, பிரபு நடிப்பில் வெளியாகியுள்ள படம் நானே வருவேன். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பிரபு. மற்றும் கதிர் இருவரும் இரட்டை குழந்தைகள். அதில் சிறு வயதிலிருந்து கெட்ட கொடூர மணம் கொண்டவன் கதிர், ஒரு கட்டத்தில் பலரைக் கொன்றுவிட்டு தனி மரமாக காட்டுப்பகுதியில் வாழ்ந்து வருகிறார். ஆனால், பிரபு தனது மனைவி மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்கிறார். இந்நிலையில், தனுஷின் மகள் இரவு நேரங்களில்  தனியாக பேசுகிறார். அவர் மீது ஒரு கெட்ட ஆவி இருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்த ஆவி ஒரு கோரிக்கை வைக்கிறது. அதை செய்தால் மட்டுமே உன் மகளை விட்டுப் போவேன் என சொல்கிறது. அந்த கோரிக்கை என்ன? தனுஷும் அதை செய்யத் துணிகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதே படத்தின் மீதின் கதை.  கதிர், பிரபு என இரண்டு வேடங்களில் தனுஷ் நடிப்பை மிரட்டி எடுத்துள்ளார். பிரபு கதாபாத்திரத்தில் பயந்த சுபாவம் கொண்ட மனிதராக நடித்துள்ளார். மறுப்பக்கம் கதிர் கதாபாத்திரத்தில் கொடூர வில்லனாக மிரட்டுகிறார்.தனுஷ் மகளாக நடித்தவர் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். படத்தில் முதல் பாதியில் இருந்த பரபரப்பு இரண்டாம் பாதியில் இல்லை. அதே நேரத்தில் வில்லன் தனுஷ் தனது அசுர நடிப்பால் இரண்டாம் பாதியை நகர்த்துகிறார்.செல்வராகவன் படம் என்றாலே வசனம் பேசப்படும், இதில் வசனங்களே பெரிதாக இல்லை. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு மற்றும் யுவனின் பின்னணி இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம். மொத்தத்தில் நானே வருவேன் படத்தில் எல்லமே இருக்கு ஆனா இல்ல.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து