முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: இந்தியாவில் 2,060 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

திங்கட்கிழமை, 17 அக்டோபர் 2022      இந்தியா
India-Corona 2022 03 15

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் 2,060 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் புதிதாக 2,060 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 13-ந் தேதி பாதிப்பு 2,786 ஆக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து 4-வது நாளாக பாதிப்பு நேற்றும் சரிந்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரத்து 888 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 1,841 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து75 ஆயிரத்து 149 ஆக உயர்ந்தது.

தற்போது 26,834 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது முன்தின நாளை விட 209 அதிகம் ஆகும். கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 4 மரணங்கள் மற்றும் நேற்று முன்தினம் கர்நாடகாவில் 2, இமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் என மேலும் 10 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,905 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து