முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2023      தமிழகம்
Students 2023-05-14

Source: provided

சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

இதன்படி மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு இன்று முதல் 31-ம் தேதி  வரை நடைபெறுகிறது. முதல் பொது கலந்தாய்வு ஜூன் 1 முதல் 10 வரையும், 2-ம் பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20 வரையும் நடைபெறுகிறது. 

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கி 22-ம் தேதியுடன் நிறைவுபெற்றது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 99,558 போ் பதிவு செய்திருந்தனர். அதில் 2 லட்சத்து 44,104 மாணவா்கள் மட்டுமே விண்ணப்பங்களை முழுமையாக பூா்த்தி செய்து, கட்டணமும் செலுத்தியிருந்தனர். இதையடுத்து விண்ணப்பித்ததில் தகுதி பெற்ற மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து