எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் தொழிற்சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 3,233 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் தினமும் 30 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். மாநகர பஸ்களில் சாதாரண ஒயிட் போர்டு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளும் பயண சலுகையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒவ்வொரு பணிமனையிலும் 'ஸ்பேர் பார்ட்ஸ்' இல்லாத காரணத்தால் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இதற்கிடையே போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக உலக வங்கி நிதி உதவியுடன் இந்த ஆண்டு 500 மின்சார பஸ்களை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டும் 500 பஸ்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
புதிதாக வாங்கப்படும் மாநகர பஸ்களை அரசு-தனியார் பங்களிப்புடன் ஓட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை போக்குவரத்து துறை ஆராய்ந்து வந்தது. இதற்கு தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறு சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து சமீபத்தில் பேசி இருந்தார்.
அப்போது அவர் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் சென்னை மாநகர போக்குவரத்தில் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி இருந்தார். மேலும் அரசு வழித்தடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படாது என்றும் ஊழியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறி இருந்தார்.
இந்த சூழ்நிலையில் 12 போக்குவரத்து பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் (காண்டிராக்ட்) 400 ஊழியர்கள் நியமிக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகர பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் மத்தியில் நேற்று முன்தினம் தகவல் பரவியது.
இதனால் மாநகர பஸ் டிரைவர்கள் நேற்று முன்தினம் மாலை திடீரென்று ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கிவிட்டு போராட்டத்தில் குதித்தனர். பஸ்களையும் பணிமனைக்கு கொண்டு சென்றுவிட்டனர். இதனால் பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். நடுரோட்டில் பல மணிநேரம் தவித்தனர்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு இந்த தகவல் தெரியவந்ததும் அவர் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம். காண்டிராக்ட் ஊழியர்கள் நியமனம் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவித்தார். இதை ஏற்று பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினார்கள். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று பஸ் ஊழியர்கள் தொழிற்சங்கத்தினரிடம் வற்புறுத்தி வருகின்றனர்.
இதனால் பஸ் ஊழியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை எடுத்து சொல்லவும், போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க கூடாது என்பதை பற்றி வலியுறுத்தி பேசவும் தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டியை இன்று சந்தித்து பேச உள்ளார். அவருடன் தொ.மு.ச. தொழிற்சங்க நிர்வாகிகளும் சென்று சந்திக்கிறார்கள். அதன்பிறகு தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும் சந்தித்து பேச உள்ளனர்.
இதுகுறித்து சண்முகம் எம்.பி. கூறுகையில் போக்குவரத்து துறையில் 'அவுட் சோர்சிங் இல்லை' என்று வாக்குறுதி தரப்பட்டதால் தொழிலாளர்களின் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது. இருந்தாலும் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இன்று அதிகாரிகளையும், அமைச்சரையும் சந்தித்து பேச உள்ளோம் என்றார்.
எனவே இன்று பேச்சுவார்த்தைக்கு பிறகு 6-ம் தேதி பஸ் ஸ்டிரைக் நடைபெறுமா? இல்லையா? என்பது தெரியவரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
வதந்திகளை நம்ப வேண்டாம்: பஞ்சாப் முதல்வர் மான் அறிவுறுத்தல்
10 May 2025சண்டிகர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துவரும் போர்ப் பதட்டங்களுக்கு மத்தியில் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறி
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
10 May 2025வாஷிங்டன் : இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
-
கடலூரில் வரும் 15-ம் தேதி கண்டன அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
10 May 2025சென்னை : அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தவறிய தி.மு.க.
-
தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் கற்றல் நிலை தேசிய சராசரியை விட சிறப்பாக உள்ளது : மாநில திட்டக்குழு தகவல்
10 May 2025சென்னை : தேசிய சராசரியைவிட தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் சிறப்பாக உள்ளதாக மாநில திட்டக் குழு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்திய கற்றல
-
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி : காஷ்மீர் அரசு அறிவிப்பு
10 May 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டிய தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
-
தேச ஒற்றுமைக்கான மக்கள் பேரணி: முதல்வருக்கு கவர்னர் ரவி பாராட்டு
10 May 2025சென்னை : தேசத்துடனான தமிழக மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பிரமாண்ட மக்கள் பேரணியை நடத்துவதற்காக முதல்-அமைச்சருக்கு கவர்னர் ரவி நன்றிகளை தெரிவித்து கொண்டார்.
-
அவசர கால உதவிக்கான ஆள்சேர்ப்பு முகாம்: சண்டிகரில் பெருமளவில் திரண்ட இளைஞர்கள்..!
10 May 2025சண்டிகர் : இந்தியா - பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி முகாம் தொடங்கியிருப்பதாக ச
-
32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜாக்களுடன் ஊட்டியில் ரோஜா கண்காட்சி தொடங்கியது
10 May 2025ஊட்டி : ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி நேற்று தொடங்கியுள்ளது.
-
அப்பாவிகளை தாக்கிய பாகிஸ்தான்: அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
10 May 2025புதுடெல்லி, பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்கி வருகிறது என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம்: மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
10 May 2025சென்னை, தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
-
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்
10 May 2025சென்னை : தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
-
இந்திய எல்லையை நோக்கி படையை நகர்த்திய பாக். ராணுவம்: வியோமிகா
10 May 2025புதுடெல்லி, இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் தனது துருப்புகளை நகர்த்துவதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
-
சலால் அணையிலிருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு
10 May 2025ஸ்ரீநகர் : இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல்கள் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்ட
-
எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்திய ராணுவ வீரர் வீரமரணம்
10 May 2025ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மராட்டிய ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த சிப்பாய் சச்சின் வனான்ஜி என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார்.
-
ஜனாதிபதியின் சபரிமலை பயணம் ரத்து
10 May 2025புதுடில்லி : இந்தியா-பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
போர்ப் பதற்றம்: உயரதிகாரிகளின் விடுமுறையை ரத்து செய்தது ஒடிசா அரசு
10 May 2025புவனேஸ்வர் : இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் காரணமாக முக்கிய பணிகளில் இருக்கும் உயரதிகாரிகளின் விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
பாக். தாக்குதலில் அரசு அதிகாரி பலி : ஒமர் அப்துல்லா இரங்கல்
10 May 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025