எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம், சேலம் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் ஏராளமானோர் உரிய உரிமம் பெற்று நாட்டு வெடி பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். சேலம் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் திருவிழாவிற்காக சர்க்கார் கொல்லப்பட்டியில் இருந்து அதிக அளவில் நாட்டு வெடி மருந்து சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் நாட்டு வெடி பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியில் சதிஸ் என்பவர் உரிமை பெற்று நாட்டு பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை சதீஷ் மற்றும் பத்துக்கு மேற்பட்டோர் பட்டாசுக் கிடங்கில் நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 4 மணியளவில் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பயங்கர சத்தத்துடன் பட்டாசுடன் வெடித்து சிதறியது.
இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அனைவரும் தூக்கி எரியபட்டனர். இதில் சதீஷ் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் அறிந்த அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மகேஸ்வரி, பிருந்தா, வனிதா, மேனகா மற்றும் மேகலா ஆகியோர் நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இது சம்பவத்தை தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெடி விபத்து சம்பவம் குறித்தும், உரிய உரிமம் பெற்றுள்ளாரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரணமாக இந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |