எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தை தொடர்ந்து சிறப்பு ரயில்கள் மூலம் 383 பேர் இன்று சென்னை வந்தடைகின்றனர்.
ஒடிசாவில் பாலசோர் பகுதியில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் தவிப்புக்குள்ளானார்கள். விபத்துக்குள்ளான 2 பயணிகள் ரயிலில் சுமார் 2 ஆயிரம் பயணிகள் பயணித்தது தெரிய வந்துள்ளது. அவர்களில் பாதி பேர் காயம் அடைந்து உள்ளனர். சுமார் 1000 பயணிகள் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு தவிக்க நேரிட்டது. பலர் உடனடியாக பஸ்களை பிடித்து மற்ற பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து எப்படி செல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் விபத்து நடந்த பகுதிக்கு அருகிலேயே அமர்ந்திருந்தனர். அவர்களை குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ரயில்வே அதிகாரிகள் நேற்று காலை செய்தனர்.
இதற்காக விபத்து பகுதிக்கு அருகே வரை சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேற்கு வங்கத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்தும் சிறப்பு ரயில் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த ரயில் பத்ரக் நகரம் வரை சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றி சென்னை திரும்பும் என்று தெரிய வந்துள்ளது. அந்த ரயிலில் 250 பயணிகள் அழைத்து வரப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல புவனேஸ்வரத்தில் இருந்தும் மற்றொரு சிறப்பு ரயில் சென்னைக்கு இயக்கப்படுகிறது. அந்த ரயிலில் 133 பேர் அழைத்து வரப்படுகிறார்கள். மொத்தம் 383 பேர் ஒடிசாவில் இருந்து சென்னை திரும்புகிறார்கள். இவர்களை அழைத்து வரும் சிறப்பு ரயில்கள் இன்று காலை சென்னை ரயில் நிலையம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025