எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி, சென்னை வரும் பயணிகளுக்கு உதவவும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவவும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசூர் என்ற இடத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்ட விபத்தில், ரயில் பெட்டிகள் சேதமடைந்து, உயிர் சேதம் ஏற்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். இதில் காயமடைந்து சென்னை வரும் பயணிகளுக்கு உதவ சென்ட்ரல், விமான நிலையத்தில் காவல் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டறையில் (எழிலகம்), அரசு அதிகாரிகள் குழுவினருடன் பணியாற்ற, சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் குழு இணைக்கப்பட்டுள்ளது. மேற்படி பயணிகளுக்கு உதவும் வகையில், சென்னையிலுள்ள பேரிடர் மீட்பு மையம் உதவி எண். 94458 69843, ரயில்வே உதவி எண்.90035 11919 மற்றும் ஒடிசா உதவி மையம் எண்.94422 35375 ஆகிய உதவி மைய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்...
விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த தமிழகம் மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் விமானம் மற்றும் இதர இரயில்கள் மூலம் சென்னை வருவதால், சென்னை விமான நிலையம் மற்றும் டாக்டர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில், ரயில்வே மற்றும் தமிழக ரயில்வே காவல்துறை (GRP) உடன் இணைந்து சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
ரயிலில் பயணம் செய்து, சென்னை, டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் நிலையம் திரும்பும் பயணிகளுக்கு உதவுவதற்காக, சென்னை பெருநகர காவல், பூக்கடை காவல் துணை ஆணையாளர் ஷ்ரேயா குப்தா, (செல் எண்.94982 33333), தலைமையில், பூக்கடை உதவி ஆணையாளர் பாலகிருஷ்ணபிரபு (செல் எண்.94440 33599) மற்றும் சிறப்பு உதவி மைய வழிகாட்டும் அதிகாரி (Liaison Officer)/C-1 பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் தளவாய்சாமி (செல் எண்.98409 76307) மற்றும் காவல் குழுவினர், சென்ட்ரல் இரயில் நிலையத்தில் தயார் நிலையில் இருப்பர். மேலும் காவல் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பர்.
காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக சிகிச்சைக்கு அளிக்க இராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் RGGGH), உதவி ஆய்வாளர் ரமேஷ் (செல் எண்.94442 06868), சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தி (செல் எண்.94981 32395) தலைமையில் காவல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்ட்ரல் இரயில் நிலையத்தில் உதவி தேவைப்படும் பயணிகள் 044-2342454 மற்றும் 94981 00211 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம். டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் இரயில் நிலைய கட்டுப்பாட்டறை எண்.044-25330952 மற்றும் 044-25330952 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
விமான நிலையத்தில்....
ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த பயணிகள், சென்னை விமான நிலையத்தில் வருகை தரும்போது, அங்குள்ள காவல் சிறப்பு கட்டுப்பாட்டறை குழுவினர் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இதற்காக, சென்னை விமான நிலையத்தில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் உதவி எண்.94981 00151 அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் திரும்பிய பயணிகளுக்கு, சிகிச்சை அளிக்கவும், படுகாயமடைந்து சென்னை திரும்பியவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனை அழைத்து செல்லவும், அவ்வாறு ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் Green corridor வழித்தடத்தில் விரைவாக அழைத்துச் செல்லவும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் தலைமையில் காவல் வாகனம் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு டாக்சி மற்றும் ஆட்டோக்களில் எந்த இடையூறும் இல்லாமல் பயணிக்கவும், பயணிகளிடம் இருந்து ஆட்டோ மற்றும் டாக்சிகளில் அதிக கட்டணம் வசூலிக்காததை உறுதி செய்யவும், போக்குவரத்து காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உரிய உதவிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி விபத்துக்குள்ளான இரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு உதவி தேவைப்படும் வகையில், சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறை எண்.044-23452359, தமிழக காவல் கட்டுப்பாட்டறை எண்.100, அவசர உதவி எண்.112 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு உதவிகள் பெறவும், குறைகள் இருப்பின் தெரிவிக்கவும், பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? - அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை விளக்கம்
10 May 2025கிருஷ்ணகிரி : சி.பி.எஸ்.இ.
-
வதந்திகளை நம்ப வேண்டாம்: பஞ்சாப் முதல்வர் மான் அறிவுறுத்தல்
10 May 2025சண்டிகர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துவரும் போர்ப் பதட்டங்களுக்கு மத்தியில் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறி
-
இந்தியா - பாக். மோதலை கைவிட வேண்டும்: சீனா வலியுறுத்தல்
10 May 2025புதுடெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாடுகளும் அமைதியாகவும், நிதானமாகவும் இந்தச் சூழலில் இருந்து உரிய முறையில் சமுகத் த
-
கடலூரில் வரும் 15-ம் தேதி கண்டன அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
10 May 2025சென்னை : அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தவறிய தி.மு.க.
-
வரும் 2030-க்குள் 50 ஆயிரம் மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் இலக்கு
10 May 2025சென்னை, வரும் 2030-ம் ஆண்டுக்குள் சூரியசக்தி மின்னுற்பத்தி 50 ஆயிரம் மெகாவாட் அளவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
10 May 2025வாஷிங்டன் : இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
-
ஆப்கன் மீது இந்தியா தாக்குதலா? - பாகிஸ்தான் குற்றச்சாட்டை மறுத்தது தலிபான் அரசு
10 May 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்குள்ளும் நுழைந்து இந்தியா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்த குற்றச்சாட்டு உண்மையல்ல என்று ஆப்க
-
வான் பாதுகாப்பு சாதனத்துக்கு எந்தப் பாதிப்புமும் இல்லை: இந்திய ராணுவம்
10 May 2025புதுடெல்லி : இந்தியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பான சுதர்சன் சக்ராவை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது தவறான தகவல் என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார
-
தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் கற்றல் நிலை தேசிய சராசரியை விட சிறப்பாக உள்ளது : மாநில திட்டக்குழு தகவல்
10 May 2025சென்னை : தேசிய சராசரியைவிட தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் சிறப்பாக உள்ளதாக மாநில திட்டக் குழு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்திய கற்றல
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: கண்ணீர் விட்ட பாக். எம்.பி.
10 May 2025பாகிஸ்தான், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து பாக். எம்.பி. கண்ணீர் விட்டது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பள்ளி மாணவா்களுக்கு வழங்க 4.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார் : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
10 May 2025சென்னை : பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி : காஷ்மீர் அரசு அறிவிப்பு
10 May 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டிய தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
-
பாகிஸ்தான் தாக்குதலில் எல்லையில் இதுவரை 22 போ் பலி
10 May 2025பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்
-
பாகிஸ்தான் தாக்குதலில் 8 இந்திய வீரர்கள் காயம்
10 May 2025ஜம்மு : ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் காயமடைந்தனர்.
-
நிகழ்ச்சியில் சைரன் ஒலியை பயன்படுத்த ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறை
10 May 2025புதுடெல்லி : நிகழ்ச்சியில் சைரன் ஒலியை பயன்படுத்த ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
தேச ஒற்றுமைக்கான மக்கள் பேரணி: முதல்வருக்கு கவர்னர் ரவி பாராட்டு
10 May 2025சென்னை : தேசத்துடனான தமிழக மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பிரமாண்ட மக்கள் பேரணியை நடத்துவதற்காக முதல்-அமைச்சருக்கு கவர்னர் ரவி நன்றிகளை தெரிவித்து கொண்டார்.
-
32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜாக்களுடன் ஊட்டியில் ரோஜா கண்காட்சி தொடங்கியது
10 May 2025ஊட்டி : ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி நேற்று தொடங்கியுள்ளது.
-
அவசர கால உதவிக்கான ஆள்சேர்ப்பு முகாம்: சண்டிகரில் பெருமளவில் திரண்ட இளைஞர்கள்..!
10 May 2025சண்டிகர் : இந்தியா - பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி முகாம் தொடங்கியிருப்பதாக ச
-
அப்பாவிகளை தாக்கிய பாகிஸ்தான்: அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
10 May 2025புதுடெல்லி, பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்கி வருகிறது என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.
-
பாக். ட்ரோன்களை தாக்கி அழித்த இந்திய ராணுவம்
10 May 2025புதுடெல்லி, பாக்கிஸ்தான் ட்ரோன்களை தாக்கி அழித்தது இந்திய ராணுவம்.
-
தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம்: மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
10 May 2025சென்னை, தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
-
வெடிக்காத சீன ஏவுகணை பஞ்சாபில் கண்டெடுப்பு
10 May 2025பஞ்சாப் : வெடிக்காத ஏவுகணை பஞ்சாப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயார்: பாக். வெளியுறவு அமைச்சர் சவடால்
10 May 2025இஸ்லாமாபாத், இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்தத் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்
10 May 2025சென்னை : தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
-
இந்திய எல்லையை நோக்கி படையை நகர்த்திய பாக். ராணுவம்: வியோமிகா
10 May 2025புதுடெல்லி, இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் தனது துருப்புகளை நகர்த்துவதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.