எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
உத்தமபாளையம் : தேனி மாவட்டம் கம்பம் அருகே சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்திய அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் நேற்று அதிகாலை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். பின்பு கும்கி யானைகள் மூலம் லாரியில் ஏற்றி களக்காடு வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து 144தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், வட்டக்கானல் வனப்பகுதியில் அரசிக் கொம்பன் என்னும் காட்டு யானையின் நடமாட்டம் அதிகம் இருந்தது. ரேஷன் கடைகளை தாக்கி அரிசியை விருப்ப உணவாக உண்டதால் இதனை கேரளாவில் அரி கொம்பன் யானை என்ற பெயரிட்டு அழைத்தனர். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்ததால் இந்த யானையை இடமாற்றம் செய்ய கேரள வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதன்படி கடந்த ஏப்.29-ம் தேதி இந்த யானைக்கு மயக்க ஊசி போட்டு தமிழக எல்லையான பெரியாறு புலிகள் காப்பகம் முல்லைக்கொடி எனும் வனப்பகுதியில் விட்டனர். முன்னதாக இதன் நடமாட்டத்தை தெரிந்து கொள்ள வசதியாக இதன் கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.
இந்த யானை கண்ணகி கோயில் வழியே மேகமலை வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதனால் மேகமலை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 27-ம் தேதி இந்த யானை கம்பம் நகருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். கூச்சல், வாகனங்களின் ஹாரன் இரைச்சலால் மிரண்டு போன இந்த யானை கம்பம் துணை மின் நிலையம் அருகே சென்றது. பாதுகாப்பு கருதி கம்பம், புதுப்பட்டி பகுதி மின்விநியோகம் தடை செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, மேகமலை புலிகள் வன சரணாலய துணை இயக்குநர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, கூடலூர், கம்பம் வனச்சரகர்கள் முரளிதரன், அன்பு உள்ளிட்ட பல அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கம்பம் நகரட்சிப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புறவழிச்சாலை அருகே யானை உலாவந்ததால் அப்பகுதி போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்நிலையில் அங்கிருந்து மேகமலை பகுதிக்கு இந்த யானை இடம் பெயர்ந்தது.
இதனைத் தொடர்ந்து யானை மீண்டும் நகருக்குள் வந்து விடாமல் இருக்க பாதுகாப்பு வளையம் அமைத்து வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களாக சண்முகாநதி அணை நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்தயானை இடம் மாறிக் கொண்டே இருந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை எரசக்க நாயக்கனூர் அருகே பெருமாள்கோயில்பட்டி எனும் பகுதிக்கு யானை வந்தது. இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் இதற்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்பு கும்கி யானைகள் மூலம் இதனை வனத்துறை லாரியில் ஏற்றினர். பிடிபட்ட இந்த யானைக்கு பலரும் பிரியாவிடை அளித்தனர். வழிநெடுகிலும் கை அசைத்து வழிஅனுப்பி வைத்தனர். இந்த யானை உத்தமபாளையம், சின்னமனூர், தேனி வழியே கொண்டு செல்லப்பட்டது.
துதிக்கை மற்றும் உடலின் பல பகுதிகளிலும் இந்தயானைக்கு காயம் உள்ளதால் உரிய சிகிச்சை அளித்த பிறகே இவற்றை வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரிசிக்கொம்பன் யானை பிடிபட்டதால் கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் நடைமுறையில் இருந்த 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
எங்கே விடப்படுகிறது?
அரிக்கொம்பன் யானை தொடர்பான வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளையில், அரிக்கொம்பன் யானை அடர் வனப்பகுதியில் விடப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயப் பகுதியில் விடப்படவுள்ளதாகவும், அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதம் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
சென்னை விமானநிலையத்தில் 10 விமானங்கள் ரத்து
08 May 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்: துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு
08 May 2025சென்னை, தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் பிளஸ்-2 ரிசல்ட் வெளியீடு: அரியலூர் மாவட்டம் முதல் இடம்
08 May 2025சென்னை, தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
தொடர்ந்து விழிப்போடு இருங்கள்: பல்வேறு துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, மாநில அதிகாரிகள், கள நிறுவனங்களுடன் இணைந்து நெருங்கிய ஒத்துழைப்பை பேண வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
-
பழனிசாமியின் கபட நாடகங்கள் ஒருநாளும் வெற்றி பெறாது: ஆர்.எஸ்.பாரதி பதிலடி
08 May 2025சென்னை, தி.மு.க.
-
ஸ்ரீநகர் உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களில் பாகிஸ்தான நடத்த இருந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா
08 May 2025புதுடெல்லி: ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர் உள்ளிட்ட இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
-
எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
08 May 2025அமிர்தசரஸ், இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இந்தியா-பாக். போர் பதற்றம்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
08 May 2025இஸ்லாமாபாத், அமெரிக்க துணைத் தூதரகம் அனைத்து தூதரக ஊழியர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க உத்தரவிட்டுள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு முழு ஆதரவு..!
08 May 2025புதுடெல்லி, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
08 May 2025சென்னை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
பாராளுமன்றத்தை கூட்ட ராகுல் காந்தி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, பாராளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் * 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்கள் * தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 May 2025திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் மற்றும் 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்க
-
தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்வு
08 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே.8) தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனையானது.
-
இந்தியா - பாக். இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் அமெரிக்க அதிபர் அறிவிப்பு
08 May 2025வாஷிங்டன்: இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்
08 May 2025மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51 மணியளவில் நடைபெற்
-
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காத பிரதமர் மோடி..!
08 May 2025டெல்லி, எல்லையில் ஏற்பட்டிருக்கும் போர்ப் பதற்றம் தொடர்பாக நேற்று (மே 8) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.
-
ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு திட்டம்:மத்திய அமைச்சரவை ஒப்புதல்
08 May 2025புதுடெல்லி, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் தேசிய திறன் பயிற்சி நிறுவன மேம்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது
-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் 98.5 சதவீதம் தேர்ச்சி
08 May 2025புதுச்சேரி, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி விழுக்காடு 98.5 சதவீதமாகும். இம்முறை அரசுப் பள்ளிகள் சி.பி.எஸ்.இ.
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தலைவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்: கிரண் ரிஜிஜு
08 May 2025புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற வி
-
கேளிக்கை வரி மசோதாவுக்கு தமிழ்நாடு கவர்னர் ஒப்புதல்
08 May 2025சென்னை, கேளிக்கை வரி மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
பாக். ஏவுகணையை இடைமறித்து அழித்த இந்தியா
08 May 2025புதுடெல்லி, பஞ்சாப்பில் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது.
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் முக்கிய தீவிரவாதி உயிரிழப்பு
08 May 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் செயல்பாட்டுத் தலைவரான அப்துல் ரவூப் அசார் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை வெற்றியால் நெருக்கடி: பிளே ஆப்-க்கு முன்னேறுமா கொல்கத்தா?
08 May 2025கொல்கத்தா, சென்னை வெற்றியால் கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை வெற்றி...
-
பா.ம.க. மாநாட்டிற்கு எதிரான மனு: சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி
08 May 2025சென்னை, பா.ம.க. மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
மத்திய அரசுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி
08 May 2025புதுடில்லி, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.