தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் இருந்து மீண்டும் பாரதீய ஜனதாவில் இணைந்தார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன்

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      இந்தியா
Maitreyan 2023 06 09

Source: provided

புதுடெல்லி : அ.தி.மு.க.வின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான மைத்ரேயன், மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

1991-ல் பா.ஜ.க.வில் இணைந்த மைத்ரேயன், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், மாநில துணைத் தலைவராகவும் இருந்தவர். கடந்த 1999-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.வில் இணைந்த மைத்ரேயன், 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சென்னை மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அப்போதைய பா.ஜ.க. மாநில தலைவர் லட்சுமணன் வெற்றி பெற்றார்.

இதையடுத்து 2002-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மைத்ரேயன் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட மைத்ரேயன், 2019-ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தார். அ.தி.மு.க.வில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் இருந்த அவர், பின்னர், எடப்பாடி பழனிசாமியின் தரப்புக்கு ஆதரவு தெரிவித்தார். அதன் பிறகு ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்ததன் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு அவரை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.

அதன் பிறகு ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆதரவாளராக இருந்து வந்த மைத்ரேயன், பா.ஜ.க.வில் இணையப் போவதாக கடந்த சில மாதங்களாக செய்தி வெளியானது. இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில், மைத்ரேயன் பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து பா.ஜ.க. தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து