தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்க விபத்தில் 3 பேர் பலி - பலர் மாயம்

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      இந்தியா
Jharkhand- 2023 06 09

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தின், பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் பவ்ரா கோலியரி பகுதியில் உள்ள பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சுரங்க விபத்தில் 3 பேர் பலியானதாகவும், மேலும் பலர் மாயமனதாகவும் துணை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

உள்ளூர் மக்களின் உதவியுடன் 3 பேர் இடிபாடுகளிலிருந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நிலக்கரி சுரங்க விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக பவ்ரா காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 59 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து