முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் உலக அழகிகள் போட்டி

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      இந்தியா
Miss-World 2023 06 09

புதுதில்லி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அழகிகள் போட்டி மீண்டும் இந்தியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து உலக அழகி  போட்டிக்கான அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி கூறியதாவது:  

இந்தியாவில் மீண்டும் உலக அழகி போட்டி நடைபெறவுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஒரு மாதத்துக்கு நடைபெறும் இந்த போட்டியில், 130க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்க உள்ளனர். 

தற்போது, போலந்தைச் சேர்ந்த கரோலினா உலக அழகியாக உள்ளார். இதுவரை நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் எனப்படும் உலக அழகிகள் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தா முகே (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளனர்.

உலக அழகி போட்டி இந்தியாவில் கடைசியாக 1996 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்றது. தற்போது 71 ஆவது உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து