முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்கொலைக்கு தடை விதித்த வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் : தேச துரோக குற்றமாக அறிவித்தார்

சனிக்கிழமை, 10 ஜூன் 2023      உலகம்
Kim-Jong-Un 2023 03 30

Source: provided

சியோல் : வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டில் தற்கொலைக்கு தடை விதித்துள்ளார். தற்கொலையை தேசத் துரோக குற்றமாக கருதி அவர் இந்த ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

அரசு அதிகாரிகள் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்கொலைகளை தடுக்க அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார். நாடு கடுமையான பொருளாதார சவால்களை சந்தித்து வருகிறது. இதனால் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்கொலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வடகொரியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தென்கொரிய ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டை விட பட்டினியால் ஏற்படும் மரணங்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. சோங்ஜின் நகரம் மற்றும் கியோங்சாங் கவுண்டியில் மட்டும் இந்த ஆண்டு 35 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. 

வடகொரியாவில் கடந்த ஆண்டை விட பொருளாதார நெருக்கடி தற்போது மோசமடைந்ததை. மக்கள் படும் கஷ்டங்களையும் துன்பங்களையும் தீர்க்க முடியாமல் உள்நாட்டில் பல பிரச்சினைகள் இருப்பதாக தென்கொரிய தேசிய புலனாய்வு சேவையின் அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.  இதனால் தான் தற்கொலைக்கு தடை விதித்து ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் அவசர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரேடியோ பிரீ ஏசியா தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து