முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்

சனிக்கிழமை, 10 ஜூன் 2023      உலகம்
Boris-Johnson-2023-05-20

Source: provided

லண்டன் : இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன். கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்த போது நாடு தழுவிய ஊரடங்கு இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்டது. அப்போது இவர் தனது அலுவலகத்தில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட சிறப்புக்குழு விசாரணை நடத்தி வருகிறது. ஒருவேளை அவர் தவறாக பயன்படுத்தினார் என இந்தக்குழு அறிக்கை தாக்கல் செய்தால், பாராளுமன்றத்தில் இருந்து அவர் 10 நாட்கள் இடைநீக்கம் செய்யப்படுவார். 

இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் அவர் வெற்றி பெற்றிருந்த தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடைபெற்ற இருக்கிறது. 

பாராளுமன்றத்தில் விட்டு வெளியேறுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதுவும் தற்போதை நிலையில்.  சிலருடைய குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரம் இல்லாமலும், குறைந்தபட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் ஒப்புதல் கூட இல்லாமலும் சிலரால் நான் கட்டாயப்படுத்தப்படுகிறேன். 

விசாரணைக்குழுவிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் என்ன வியப்பு என்றால், என்னை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தனர் என்பது தெரியவந்தது என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து