முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா சதுக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறப்பு: தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காதது ஏன்? - அமைச்சர் உதயநிதி விளக்கம்

சனிக்கிழமை, 10 ஜூன் 2023      தமிழகம்
Udayanidhi 2021 12 12

Source: provided

சென்னை : சென்னை மெரினா கடற்கரை அருகில் அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை நேற்று அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். அப்போது தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து அவர் விளக்கம் அளித்தார். 

சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள அண்ணா சதுக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நீண்ட நாட்களாக பஸ் நிலையம் திறந்த வெளியில் இருந்ததால் வெயில், மழை காலங்களில் பயணிகள் ஒதுங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அங்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு பஸ் நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பஸ் நிலையத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின்னர் அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஒரு கோடியே இருபது லட்சம் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. அண்ணா சதுக்கத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் கழிப்பிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்காதது குறித்த தீவிர விசாரணை செய்த பின் தான் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தகவல் பரிமாற்ற குழப்பத்தால் இது நடந்து விட்டது. 

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும். கடந்த 2 ஆண்டுகளாக தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறாமல் இருந்து உள்ளது. காணொலி மூலமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். அதன் பின் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுள்ளனர். மீண்டும் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து