எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நெல்லை : தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை அளித்த கலைஞர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971-ம் ஆண்டில் உருவாக்கினார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதத்துடன் கூறினார்.
ரூ.80 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட தமிழ்நாடு ஹோட்டல் தங்கும் விடுதி அமுதகம் உணவகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்ததாவது
நாட்டின் அன்னிய செலாவணி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் சுற்றுலாத்துறையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், சுற்றுலாத் பயணத்திட்டங்கள், சுற்றுலா பேருந்து சேவைகள், படகு சேவைகள், தொலைநோக்கி இல்லங்கள் என சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.
கொரோனா நோய் தொற்றினால் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சிகளால் 2021 ஆம் ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 4,07,139 ஆக உயர்ந்து இந்த ஆண்டு 2023 ல் மார்ச் மாதம் வரை 3 மாத காலத்தில் மட்டும் 2,67,773 ஆக உயர்ந்துள்ளது.
இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021 ல் 11,53,36,719 ஆக இருந்து 2022 ல் 21,85,84,846 ஆக உயர்ந்து, இந்த ஆண்டு 2023 ல் மார்ச் மாதம் வரை 3 மாத காலத்தில் 6,64,90,154 என உயர்ந்துள்ளதோடு, விரைவான வளர்ச்சியை பெற்று இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை மாநிலமாக விளங்கி வருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு முழுவதும் 28 ஓட்டல்களை நேரடியாக நிர்வகித்து வருகின்றது. இவற்றில் 473 குளிரூட்டப்பட்ட அறைகளும், 199 சாதாரண அறைகளும், மலைப்பகுதி சுற்றுலாத்தளங்களில் 172 அறைகளும் என மொத்தம் 845 அறைகள் பொதுமக்களுக்கு தங்கும் வசதி சேவையை வழங்கி வருகின்றன. ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்பட முக்கிய நகரங்களில் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் நகரின் மையப்பகுதிகளில் குறைவான கட்டணத்தில் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக தங்கும் விடுதிகளில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டண சலுகைகள் அளிக்கப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில், சாகச படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகளுடன் கூடிய படகு குழாம்களை கொடைக்கானல், உதகமண்டலம், பைக்காரா, ஏற்காடு, முட்டுக்காடு, முதலியார் குப்பம், பிச்சாவரம், குற்றாலம் மற்றும் வாலாங்குளம் ஏரி உள்ளிட்ட 9 இடங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படகு குழாம்களை இயக்கி வருகிறது. வாட்டர் ஸ்கூட்டர்கள், மோட்டர் படகுகள், விரைவு படகுகள், மிதிப்படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள், குழந்தைகளுக்கான மிதிப்படகுகள் என மொத்தம் 588 படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு நீங்காத அனுபவங்களை அளித்து வருகின்றன.
மேலும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும்; வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கான பல்வேறு சீரிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வழிப்பாட்டுதளங்களை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். என மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
09 May 2025புதுடில்லி, புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்
09 May 2025ஸ்ரீநகர், பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
-
பாகிஸ்தானுக்கு 3 நாடுகள் ஆதரவு: பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்
09 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் தெளிவான ஆதரவை வழங்க முன்வந்துள்ளன என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி
09 May 2025சென்னை, பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்று (மே.10) சென்னையில் தனது தலைமையில்
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் : துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் தகவல்
09 May 2025வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் தெரிவித்திருக்கிறார்.
-
24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
09 May 2025சென்னை, தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
விமானநிலையங்கள் பாதுகாப்பு: அமித்ஷா தலைமையில் ஆய்வுக்கூட்டம்
09 May 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவரும் ராணுவ மோதல்களுக்கு மத்தியில், நாட்டிலுள்ள விமானநிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து உள்துறை
-
திருச்சி, பஞ்சப்பூரில் ரூ. 408.36 கோடியில் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
09 May 2025திருச்சி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்
-
ஜூன் 15ம் தேதி முதல் புதிய மினி பேருந்து திட்டம்
09 May 2025சென்னை : புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 15ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
-
பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்திடுங்கள்: கட்சியினருக்கு இ.பி.எஸ். வேண்டுகோள்
09 May 2025சென்னை, எதிர்வரும் எனது பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியினர் என்னை நேரில் வந்து சந்திப்பதையும், எந்தவிதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
-
தாக்குதல் முயற்சி முறியடிப்பு; பாதுகாப்பு படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
09 May 2025ஸ்ரீநகர், 'பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிக்கப்பட்டன' என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
-
இந்தியா பதிலடியில் பாக்., ராணுவ தளங்கள் சேதம்
09 May 2025புதுடில்லி, இந்தியா அளித்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள், முகாம்கள் சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
-
திருச்சியில் ரூ.276.95 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
09 May 2025திருச்சி, திருச்சியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
போர்ப் பதற்றம் எதிரொலி: பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
09 May 2025புதுடில்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்?
-
மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருத்தேரோட்டம் கோலாகலம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
09 May 2025மதுரை : மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவின் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து 11ஆம் நாள் நிகழ்வாகத் திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹர ஹர சிவா என்ற பக்த
-
எதிரிகளால் பேரிழப்பு: உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான்
09 May 2025பாகிஸ்தான் : உலக வங்கயிடம் இருந்து பாகிஸ்தான் அரசு கூடுதல் கடன் கோரியுள்ளது.
-
அதிகரிக்கும் போர் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
09 May 2025புதுடெல்லி, அதிகரிக்கும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
-
வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில்
09 May 2025இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தர்மசாலா திடலில் பஞ்சாப் கிங்ஸ் - டில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி வியாழக்கிழமை இரவு பாதியி
-
இந்தியா-பாக் போர்ப்பதற்றம் எதிரொலி: ஐ.பி.எல். போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் : பி.சி.சி.ஐ. அதிகாரபூர்வ அறிவிப்பு
09 May 2025மும்பை : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐ.பி.எல்.
-
தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் 3 வகை அணிகளுக்கும் ஒரே பயிற்சியாளர் நியமனம்
09 May 2025கேப் டவுன் : தெ.ஆ. அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 அணிகளுக்கும் ஒரே பயிற்சியாளரை நியமித்துள்ளது.
ஒரே பயிற்சியாளர்...
-
மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம்: பாதுகாப்பு வளையத்துக்குள் டெல்லி - தீவிர கண்காணிப்பு
09 May 2025புதுடெல்லி, மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
புதிய போப் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
09 May 2025வாடிகன் : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் 26-ம் தேதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது.
-
மதவாத பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி: பாக். மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
09 May 2025புதுடெல்லி : மதவாத பிரச்சினையை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்வதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
-
வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள்
09 May 2025சென்னை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்றுமுன்தினம் (மே 9) தொடங்கிய
-
தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
09 May 2025புதுடெல்லி, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.