எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்களை கட்சி தலைமை அலுவலகத்தில் சேர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 21-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் தலைமைக் கழகத்தால், கடந்த 5.4.2023 முதல் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் 4.5.2023 முதல் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்களை தலைமைக் கழகத்தில் சேர்ப்பிப்பதற்கான காலக் கெடுவை நீட்டித்துத் தருமாறு, 10.9.2023 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 21.9.2023 - வியாழக் கிழமை மாலை 5 மணிவரை நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதி வாய்ப்பாகும்.
புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுள்ள கட்சியின் உடன்பிறப்புகள் மட்டுமே, கட்சியின் அமைப்புத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும், கட்சி பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றுவதற்கும், தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிவிப்பில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |