முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேவிஸ் கோப்பை டென்னிஸ் - சுமித் நாகல் அசத்தல் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2023      விளையாட்டு
Sumit-Nagal 2023-09-17

Source: provided

லக்னோ : மொராக்கோவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் முதல் நாள் ஆட்டத்தை இந்திய அணி 1-1 என சமநிலையில் முடித்தது.

லக்னோவில் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், மொராக்கோவின் யாசின் டிலிமியுடன் மோதினார். இதில் டை பிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை சசிகுமார் முகுந்த் 7-6 (4) என கைப்பற்றினார்.

2-வது செட்டில் மீண்டு வந்த யாசின் 7-5 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். கடைசி செட்டில் யாசின் 4-1 என முன்னிலை வகித்த நிலையில் சசிகுமார் முகுந்த் தசைபிடிப்பு காரணமாக வெளியேறினார். இதனால் யாசின் டிலிமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

2-வது ஆட்டத்தில் சுமித் நாகல், ஆடம் மவுன்ந்திரை எதிர்கொண்டார். இதில் சுமில் நாகல் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இரு அணிகள் இடையிலான மோதல் 1-1 என சமநிலையை அடைந்துள்ளது. கடைசி நாளான நேற்று இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி ஜோடியானது மொராக்கோவின் எலியட் பெஞ்செட்ரிட், யூனெஸ் லலாமி லாரூசி ஜோடியுடன் மோதுகிறது. ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் சுமித் நாகல், யாசின் டிலிமியுடன் மோதுகிறார். மற்றொரு ஆட்டத்தில் சசிகுமார் முகுந்த், ஆடம் மவுன்ந்திரை சந்திக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து