தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் மீது களங்கம் ஏற்படுத்த முயன்ற வீரலட்சுமி மன்னிப்பு கேட்க வேண்டும் : சீமான் பரபரப்பு பேட்டி

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      தமிழகம்
Seeman 2023 01 22

Source: provided

சென்னை : என் மீது களங்கம் ஏற்படுத்த முயன்ற வீரலட்சுமி பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். 

நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் பரபரப்பு புகார் அளித்தார். 

நடிகை விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2-வது முறையாக சம்மன் வழங்கப்பட்டது. இதற்கிடையில், இரு நாட்களுக்கு முன்பு சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகாரை வாபஸ் பெற்றார். 

முன்னதாக நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்காக மனைவியுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜரானார். விசாரணைக்கு சீமானுடன் வழக்கறிஞர் ரூபன் சங்கர் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 

சீமானிடம் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; 

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நானே விருப்பப்பட்டுதான் வந்தேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளேன். சிலரின் தூண்டுதலின் பேரில் தான் என் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. என்னுடைய வளர்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியாமல் இதை செய்கிறார்கள்.  

என் பெயரை களங்கம் ஏற்படுத்தவே பெண்ணுடன் தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். இந்த பெண்களால் 13 ஆண்டுகள் நான் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன். 8 முறை கருக்கலைப்பு என்பது நகைச்சுவையாக உள்ளது. சமூக முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்களை இப்படி செய்யக்கூடாது. என் மீது களங்கம் ஏற்படுத்த முயன்ற வீரலட்சுமி பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 13 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 13 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 14 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 15 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து