முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேரு, வாஜ்பாய், மன்மோகனால் பாராளுமன்றத்துக்கு பெருமை : பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி : நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் பாராளுமன்றத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பாராளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. பழைய கட்டிடத்தின் கடைசி நாளாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதிய கட்டடத்தில் கூட்டம் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியது: “இந்த வரலாற்று கட்டடத்திலிருந்து நாம் விடைபெறுகிறோம். நாம் புதிய கட்டடத்துக்குச் செல்வதற்கு முன், இந்த பாராளுமன்ற கட்டடத்துடன் தொடர்புடைய உத்வேகமான தருணங்களை நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது. இந்த கட்டமானது ஆங்கிலேயர்களால் கட்ட முடிவெடுக்கப்பட்டது என்றாலும்,  நம் நாட்டு மக்களின் வியர்வை, உழைப்பு மற்றும் பணத்தால் கட்டடப்பட்டது என்பதை பெருமையுடன் சொல்வோம்.

இந்தியர்களின் சாதனைகள் இன்று அனைத்து பகுதிகளிலும் விவாதிக்கப்படுகின்றன. இது 75 ஆண்டுகால நமது பாராளுமன்ற வரலாற்றின் ஒன்றுபட்ட முயற்சியின் பலம். சந்திரயான் 3-ன் வெற்றி இந்தியாவை மட்டுமின்றி உலகையே பெருமைப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம், அறிவியல், விஞ்ஞானிகளின் திறன் மற்றும் 140 கோடி மக்களின் பலம் ஆகியவற்றுடன் இணைந்த நாட்டின் வலிமை புதிய வடிவத்தை எடுத்துக்காட்டுகிறது.

ஜி20 மாநாட்டின் வெற்றி என்பது தனி நபரோ, தனி கட்சியின் வெற்றி அல்ல. இது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வெற்றி. இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி20 மாநாடு பதிலளித்துள்ளது. நாட்டின் பன்முகத்தன்மையை இந்த பாராளுமன்றம் பறைசாற்றுகிறது. பாராளுமன்றத்தில் எம்பியாக முதல்முறையாக நுழைந்தபோது நான் கீழே விழுந்து ஜனநாயகத்தின் கோவிலை வணங்கிவிட்டு நுழைந்தேன். ரயில்வே நடைமேடையில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை பாராளுமன்றத்துக்குள் நுழைய முடியும் என்று நான் நினைத்துகூட பார்க்கவில்லை. மக்களிடம் இவ்வளவு அன்பை பெறுவேன் என்பதையும் நினைத்து பார்த்ததில்லை.

கடந்த 75 ஆண்டுகளாக பாராளுமன்றம் மீது மக்கள் அசைக்க முடியாது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கை தொடரவேண்டும் என்பதே எனது விருப்பம். அனைத்து சமூகத்தினரும் பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளனர். அதிகளவிலான பெண்களின் பங்களிப்பு இந்த பாராளுமன்றத்துக்கு பெருமை சேர்த்துள்ளது. நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் பாராளுமன்றத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 

இதே அவையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு ஜனநாயகம் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது. வங்கதேசத்துக்கு சுதந்திரம் பெற்றுதரும் வரலாற்று முடிவும் இதே பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்டது. இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர் அம்பேத்கர். நாட்டின் பொருளாதார சுமையை குறைக்க நரசிம்மராவ் தலைமையிலான அரசு பாடுபட்டது. அதேபோல், பசுமை புரட்சிக்கான புதிய திட்டத்தை வகுத்தவர் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து