முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடா நாட்டுடனான உறவில் விரிசல்: விசா வழங்கும் சேவையை நிறுத்தி இந்தியா நடவடிக்கை

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2023      இந்தியா
Central-government 2021 12-

புது டெல்லி, கனடா நாட்டுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், விசா வழங்கும் சேவையை நிறுத்தி இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

கனடாவில் சுர்ரே பகுதியை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். கனடாவின் குடிமகன் அந்தஸ்து பெற்றவரான அவர், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியா மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால், இரு நாடுகளும் அந்தந்த நாடுகளின் தூதர்களை வெளியேறும்படி உத்தரவிட்டு உள்ளது. 

இந்நிலையில், கனடாவின் வின்னிபக் என்ற பகுதியில் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி நேற்று சுட்டு கொல்லப்பட்டார்.  சுக்தூல் சிங் என்ற அந்த காலிஸ்தான் பயங்கரவாதி 2 கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டார். 

அவர், 2017-ம் ஆண்டு கனடாவுக்கு போலி ஆவணங்கள் மூலம் சென்றுள்ளார் என கூறப்படுகிறது. இவர், அர்ஷ்தீப் தல்லா என்பவரின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டு வந்துள்ளார்.  

இந்த நிலையில் கனடா நாட்டுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், விசா வழங்கும் சேவையை இந்தியா நிறுத்தி உள்ளது. இதன்படி, அடுத்த உத்தரவு வரும் வரை இந்த சேவை நிறுத்தப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து