முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் உரிமை திட்ட பயனாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கடிதம்

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023      தமிழகம்
Stelin 2022 02 23

Source: provided

சென்னை : மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் தனித்தனியே வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதியின்படி தமிழகம்  முழுவதும் பெண்களுக்கான மாதாந்திர உரிமை தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

திட்டம் தொடங்கி வைப்பதற்கு முன்னதாகவே, பலருக்கு ரூ.1000 தொகை அனுப்பி வைக்கப்பட்டது. இதனால், பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதன் பிறகு, உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் 1.06 கோடி பெண்களுக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் தனித்தனியே வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதல்வரின் வாழ்த்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

அந்த கடிதத்தில், இனி மாதம்தோறும், ஆயிரம் ரூபாய் தங்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசால் நேரடியாக வரவு வைக்கப்படும். கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கீகாரமே இத்தொகையாகும். 

இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை, உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து