முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்மை கதையாக வரும் 'சீரன்'

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      சினிமா
Seren 2023-09-25

Source: provided

Netco Studios சார்பில் ஜேம்ஸ் கார்த்திக், மற்றும் நியாஸ் தயாரிப்பில், துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா நடிப்பில் உருவாகியுள்ள கமர்ஷியல் திரைப்படம் 'சீரன்'. இப்படத்தில் ஆடுகளம் நரேன், அருந்ததி நாயர், செண்ட்ராயன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் மற்றும் நாயகன் ஜேம்ஸ் கார்த்திக் பேசுகையில், நான் என் சிறு வயதில் பார்த்த விஷயங்களை இந்தப் படத்தில் கொண்டு வர முயற்சி செய்துள்ளோம். ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள் நன்றி என்றார். படத்தின் இயக்குநர் துரை K முருகன் பேசுகையில், இந்த கதையை கேட்கும் போது என் சிறு வயதில் என் தாத்தா, எத்தகைய சாதி வெறியுடன் இருந்துள்ளார் என்ற ஞாபகமும் அவர் மீதான பெரும் கோபமும் வந்து போனது. அதனையும் அழுத்தமாக இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து