Idhayam Matrimony

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகல்: அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி முறிந்தது: இ.பி.எஸ். தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      தமிழகம்      அரசியல்
EPS 2023-09-25

சென்னை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் சமீப கால கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி தற்போது முறிந்துள்ளது. அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இது குறித்த அறிவிப்பை முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி வெளியிட்டார். இதையடுத்து அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்குப் பின்னர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று(நேற்று) நடந்த கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் பின்வருமாறு: 

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அ.தி.மு.க. மீதும், எங்களுடைய கட்சியின் தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.

மேலும், பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அ.தி.மு.க. வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தும் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தலைமைக் கழகத்தின் எம்.ஜி.ஆர். மாளிகையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அ.தி.மு.க. இன்று(நேற்று) முதல் பா.ஜ.க.விலிருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

வருகின்ற 2024-ல், நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்ற கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் கூறினார். இவ்வாறு அவர் படித்து கொண்டிருக்கும் போதே அங்கு கூடியிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலக வலியுறுத்தினர். கே.பி.முனுசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த போது, கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதே போல் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து