முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலவின் தென்துருவத்தில் உறக்க நிலையில் விக்ரம் லேண்டர் : மீண்டும் இயக்கத்திற்கு வர வாய்ப்பில்லை: இஸ்ரோ

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      இந்தியா
ISRO 2023-09-26

Source: provided

பெங்களூரு : நிலவின் தென்துருவத்தில் உறக்க நிலையில் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் இயக்கத்திற்கு வர வாய்ப்பில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட விக்ரம் லேண்டர் சூரிய உதயத்தின் போது இயக்கத்திற்கு வந்து ஆய்வு பணியை தொடங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி நிலவில் சூரியன் மறைந்ததும் கடந்த 4-ம் தேதி லேண்டர் மற்றும் ரோவரின் ஆய்வு பணிகளை விஞ்ஞானிகள் நிறுத்தி இருந்தனர். 

இதை தொடர்ந்து சூரிய உதயத்திற்கு பிறகு அவற்றில் இருந்து சூரிய சக்தியை பெற்று ரோவர் மற்றும் லேண்டர் கடந்த 22-ம் தேதி மீண்டும் இயக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஞ்ஞானிகள் எதிர்பார்த்தபடி அவற்றில் இருந்து இதுவரை எந்த சமிக்ஞையும் வரவில்லை. 

இதனால் எதிர்காலத்தில் லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் இயக்கத்திற்கு வரும் சாத்தியக்கூறுகள் குறைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் நிலவின் மேற்பரப்பு குளிர்ந்த வானிலையை எதிர்கொள்ளும் வகையிலான உபகரணங்கள் அவற்றுக்குள் இடம்பெறாதது இதற்கு காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து