முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு : காயத்தால் ஹசரங்கா நீக்கம்

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      விளையாட்டு
Sri-Lanka 2023-09-27

Source: provided

கொழும்பு : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பில் இருந்து முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா மீளாததால் அவர் அணியில் இடம் பெறவில்லை. லங்கா பிரிமீயர் லீக்கில் ஆல்-ரவுண்டராக அட்டகாசப்படுத்திய ஹசரங்கா (279 ரன் மற்றும் 19 விக்கெட்) இல்லாதது இலங்கைக்கு நிச்சயம் பின்னடைவு தான். கேப்டனாக தசுன் ஷனகா நீடிக்கிறார். குசல் மென்டிஸ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை அணி வருமாறு:-

ஷனகா (கேப்டன்), குசல் மென்டிஸ், குசல் பெரேரா, நிசாங்கா, திமுத் கருணாரத்னே, சமரவிக்ரமா, சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, துஷன் ஹேமந்தா, தீக்ஷனா, வெல்லாலகே, கசுன் ரஜிதா, பதிரானா, லாஹிரு குமாரா, தில்ஷன் மதுஷன்கா. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 7-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை டெல்லியில் சந்திக்கிறது. அதற்கு முன்பாக வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து