முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த சூழ்நிலையிலும் இனி பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி இல்லை கே.பி.முனுசாமி திட்டவட்டம்

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      தமிழகம்
Munusamy 2023-09-28

Source: provided

கிருஷ்ணகிரி:இனி எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. உறுதியாக கூட்டணியில் இருக்காது. பாராளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இருக்காது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

கடந்த 25-ம் தேதி, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், ஏற்கெனவே எங்களுடன் கூட்டணியில் இருந்த, பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை எங்கள் இயக்கத்தைப் பற்றியும், தலைவர்கள் பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் செய்த காரணத்தால், ஏற்கெனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததைக் கண்டித்து ஒரு கண்டனத் தீர்மானமே அ.தி.மு.க. சார்பில் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்தும், பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை, பேரறிஞர் அண்ணா குறித்தும், கட்சியின் பொதுச் செயலாளர் குறித்தும் விமர்சனம் செய்தார். அந்த விமர்சனங்கள் அனைத்தும் உண்மைக்கு மாறான விமர்சனங்களாக இருந்ததால், தமிழகத்தில் உள்ள இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், ஊடக விவாதங்களில், நேரம் வரும் போது அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து விடும் என்று கூறி மக்களை திசைத்திருப்ப முயற்சித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும், அ.தி.மு.க. ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருப்பதாகவும், நேரம் வரும் போது பா.ஜ.க.வுடன் இணைந்து விடுவார்கள் என்றும் கூறி இருக்கின்றனர். 

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க.வை வெளியேற்றிய உடன் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக அவர்கள் இதுபோல உளறி வருகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க.வை வெளியேற்றி ஏற்கெனவே அ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறி விட்டோம். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம் என்று தெரிவித்தார். 

அ.தி.மு.க. கூட்டணி ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், எங்களைப் பொறுத்தவரையில், தமிழக மக்கள்தான் எங்களுடைய எஜமானர்கள். தமிழக மக்கள்தான் எங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அம்மக்களின் உரிமைகள், நலனைக் காப்பதற்காகவும், தேவையான நிதியை பெறவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

எங்களைப் போலவே ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் என்ற கட்சி இருக்கிறது. அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் யாரை முன்னிறுத்தி பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறார். ஆந்திராவில் இருக்கும் இரண்டு கட்சிகள் யாரை பாராளுமன்றத் தேர்தலில் முன்னிறுத்துகின்றனர். இண்டியா கூட்டணி என்று சொல்கிறார்களே, இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யாரை முன்னிறுத்தி வாக்குகளை சேகரிக்கின்றனர். எனவே, தமிழக மக்களுடைய நலனில் அக்கறை கொண்டு, எங்கள் குரல் பாராமன்றத் தேர்தலில் ஒலிக்கும் என்று கூறினார். 

மேலும் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை ஏதும் நடத்தினார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க.வை வெளியேற்றி விட்டதாக ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றி விட்டோம். இனி எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. உறுதியாக கூட்டணியில் இருக்காது. பாராளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இருக்காது என்பதை அ.தி.முக. சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏற்கனவே 2014-ம் ஆண்டு காவிரியில் தண்ணீர் பெறுவது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.க்கள் 22 நாட்கள், பாராமன்றத்தை செயல்படாமல் முடக்கினோம். எனவே 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி சந்திப்போம். 

அ.தி.மு.க. கூட்டணியில் வலுவான கூட்டணி அமையும். இந்த கூட்டணியில் எந்த கட்சிகள் இணையும் என்பதை காலம்தான் முடிவு செய்யும். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. மேலும், 9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் நிறை, குறைகள் குறித்து பேசுவோம் என்று அவர் கூறினார். 

பேட்டியின் போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணகிரி அசோக்குமார், ஊத்தங்கரை தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனி வெங்கடப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து