முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனியில் உறைந்து கிடக்கும் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதில் சிக்கல்

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      இந்தியா
Chandrayaan-3 2023-08-23

Source: provided

திருப்பதி : நிலவின் மேற்பரப்பில் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் குளிர் வீசுவதால் சந்திராயனின் விக்ரம் லேண்டர் விண்கலம் மீண்டும் விழித்துக் கொண்டு ஆராய்ச்சி செய்யும் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது.

சந்திரயான்-3 மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. அதனைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் 12 நாட்கள் பல ஆய்வுகளையும் மேற்கொண்டது. 

இது தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தது.  இதனையடுத்து நிலவின் தென் துருவத்தில் இரவு சூழல் வந்ததால், ரோவர் மற்றும் லேண்டர் காலங்களின் இயக்கமானது முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டு அவை உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

உறக்கத்துக்கு பிறகு மீண்டும் விழித்தெழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிலவில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரிடம் இருந்து இதுவரை எந்த சிக்னலும் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தெரிவித்து இருந்தது. 

லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ளும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலவின் மேற்பரப்பில் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் குளிர் வீசியது. இதனால் விண்கலத்தில் இருந்து பதில் எதுவும் வரவில்லை.இதன் மூலம் மீண்டும் விண்கலம் விழித்துக் கொண்டு ஆராய்ச்சி செய்யும் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது. 

விக்ரம் மற்றும் பிரக்யானுக்கு சூரிய சக்தி தான் அடிப்படை. வெப்பநிலை குறைவதால் மின்சாரம் தயாரிக்க ஹைட்ரோதெர்மல் ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. விண்கலத்தின் பூஜ்ய வெப்பமான வானிலையில் நமது பேட்டரிகள் மற்றும் இந்த ஹீட்டர்களில் அந்த இழுப்பு கதிரியக்க சிதைவு தொடர்வதால் சிக்கல் நீடித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து