முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை கிரிக்கெட் அகமதாபாத்தில் 4ம்தேதி கோலாகல தொடக்க விழா: கண்கவர் நடனம்,லேசர் ஷோவுக்கு ஏற்பாடு

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      விளையாட்டு
Stadium 2023-10-02

Source: provided

அகமதாபாத் : 13-வது ஐசிசி உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் வரும் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உளபட 10 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

வரும் 5-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் வரும் 4-ம்தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. அன்று மாலை 7 மணிக்கு தொடங்கும் பிரமாண்ட தொடக்க விழாவில் இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் லேசர் ஷோ மற்றும் வாணவேடிக்கைகள் நடைபெறும். பாலிவுட் நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சி நடைபெற பெற உள்ளது.

நடிகர் ரன்வீர்சிங், தமன்னாவின் நடன நிகழ்ச்சி, ஆஷா போஸ்லே, ஸ்ரேயா கோஷல், அரிஜித் சிங், சங்கர் மகாதேவன் ஆகியோர் பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். மேலும் 10 அணி கேப்டன்கள் அறிமுக நிகழ்ச்சியும் நடக்கிறது. 5-ம் தேதி இங்கிலாந்து-நியூசிலாந்து போட்டிக்கு டிக்கெட் எடுத்துள்ள ரசிகர்கள் இந்த தொடக்கவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மேடை உள்பட தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒத்திகை நிகழ்ச்சியுடன் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து