முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி ரோஸலின் காலமானார்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      உலகம்
Rosaline 2023-11-21

வாஷிங்டன், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரின் மனைவி ரோஸலின் காலமானார். 

அமெரிக்காவில் 1977-ம் ஆண்டு முதல் 1981 வரை அதிபராக பதவி வகித்தவர் ஜிம்மி கார்டர் என அழைக்கப்பட்ட ஜேம்ஸ் எர்ல் கார்டர் (99). ஜிம்மி கார்டரின் மனைவி ரோஸலின் கார்டர் (96). கடந்த 1927-ல் அமெரிக்காவில் பிறந்த ரோஸலின், 1946-ல் ஜிம்மி கார்டரை மணந்தார். இவர்களுக்கு 4 குழந்தைகளும், 11 பேரக் குழந்தைகளும், 14 கொள்ளுப் பேர குழந்தைகளும் உள்ளனர்.

அமெரிக்க அதிபர்களிலேயே நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்து வந்த தம்பதியினரான இருவரும் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் கார்டர் சென்டர் எனும் பெயரில் லாபநோக்கற்ற அறக்கட்டளையை நடத்தி வந்தனர். 

ரோஸலின், தன் கணவரின் பதவிக் காலம் நிறைவடந்ததும் எழுத்தாளராகவும் சமூக மற்றும் பொதுநல தொண்டுகளில் ஆர்வமுடையவராகவும் தன்னை முன்னிறுத்தி வந்தார். பெண்கள் உரிமை, மனநலம் உள்ளிட்ட விஷயங்களில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார்.

கடந்த மே மாதம் ரோஸலினுக்கு டிமென்சியா நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக, குடும்பத்தார் அருகில் இருக்க, ரோஸலின் கார்டர் காலமானதாக அவர்களின் அறக்கட்டளை செய்தி வெளியிட்டுள்ளது.

என் சாதனைகள் அனைத்திற்கும் உறுதுணையாக இருந்தவர் ரோஸலின். எனக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கி வந்தார். அவர் இருந்த வரையில் என் மீது அன்பு செலுத்த ஒருவர் இருக்கிறார் என நான் அறிந்திருந்தேன் என முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டர் தன் மனைவி குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து