முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: ரூ.1760 கோடி மதிப்பில் பரிசுகள், போதைப்பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் ஆணையம் தகவல்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      தமிழகம்
Election-Commision 2023-04-20

புதுடெல்லி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ரூ.1760 கோடி மதிப்பிலான பரிசுகள், போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் தெலங்கானா மற்றும்  ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த 5 மாநிலங்களில் தேர்தல் தேதிகள் அக்டோபர் 9 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. 

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை பல்வேறு அரசியல் கட்சிகளால் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.1760 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள், மது உள்ளிட்ட போதைப் பொருட்கள், பணம் ஆகியவை தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தத் தகவலை இந்தியத் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. இந்த ஐந்து மாநிலங்களில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது ரூ.239 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதைவிட இந்தத் தேர்தலில் 7 மடங்கு அதிகமாக பரிசுப் பொருட்கள், மது, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து