முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      இந்தியா
Odisha 2024-04-30

Source: provided

புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதியும். 2-ம் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1-ம் தேதி கடைசி கட்டமான 7-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஒடிசா மாநிலத்தில், பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஒடிசாவில் 5-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. பல அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஒடிசாவில் நவீன் பட்நாயக் ஹிஞ்சிலி, கன்டாபஞ்சி ஆகிய 2 தொகுதிகளில் அவர் களம் காண்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து