முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இட ஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறித்து வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 2 மே 2024      இந்தியா
Rahul-Gandhi-1 2023 04 03

Source: provided

புதுடில்லி : அரசுப் பணிகளை ஒழித்து தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறித்து வருகிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதே மோடி அரசின் தாரக மந்திரம். மூங்கில் இல்லை என்றால், புல்லாங்குழல் இசைக்க முடியாது. இதன் அர்த்தம், அரசுப்பணி இல்லை என்றால், இட ஒதுக்கீடு இருக்காது.  கண்மூடித்தனமான தனியார்மயமாக்கல் மூலம், அரசுப் பணிகளை ஒழித்துக்கட்டி , தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறித்து வருகிறது.

2013-ல் பொதுத்துறை நிறுவனங்களில் 13 லட்சம் நிரந்தர பணியிடங்கள் இருந்த நிலையில் 2023-ல் அது 8.4 லட்சமாக குறைந்து விட்டது. பி.எஸ்.என்.எல்., பெல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்ததன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் 6 லட்சம் பணியிடங்களை ஒழிக்கப்பட்டன. இந்த பணியிடங்கள் தான், இடஒதுக்கீட்டின் பலன்களை அளித்தது.

ரயில்வே உள்ளிட்ட நிறுவனங்களில், அரசுப் பணிகளை ஒப்பந்த முறைக்கு மாற்றியதன் மூலம் ஒழிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிலடங்காதவை. மோடி அரசின் தனியார்மயமாக்கல் என்பது நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பது. இதன் மூலம், தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையை பறிப்பது.

பொதுத்துறை நிறுவனங்களை வலிமையாக்குவதுடன், 30 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பி, அனைத்து சமுதாயத்திற்கான வேலைவாய்ப்பு கதவுகளை திறப்போம் என காங்கிரசின் உத்தரவாதமாக அளிக்கிறோம். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து