முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சனிக்கிழமை, 4 மே 2024      தமிழகம்
India-Meteorological 2022

Source: provided

சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அலை வீசும் என்றும்தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மே 6 ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதேவேளையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 6-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நேற்று வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதே போல்  தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மே 7, 8 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பினை சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்தது. இதுதொடர்பான அந்த செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 06.05.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

07.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

08.05.2024 மற்றும் 09.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து